Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் ‘கோமாளி’ பட இயக்குனர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கனதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோமாளி படத்தின் இறுதிக்காட்சியில் பிரதீப் ரங்கனதன் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |