தனியார் பள்ளியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று அந்தப் பள்ளியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் பள்ளிசான்றிதழ்கள் மற்றும் வங்கி சேமிப்பு பத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வரான ஆரோக்கியம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.