Categories
தேசிய செய்திகள்

அவன் கூட போ…. “ரூ 500க்கு மனைவியை விற்று”… அதிர வைத்த கணவன்..!!

தாலி கட்டிய தன்னுடைய மனைவியை 500 ரூபாய்க்கு கணவன் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது .

குஜராத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா என்பவர் கூறுகையில், 21 வயது இளம் பெண் ஒருவர் எங்களிடம் வந்து ஒரு புகார் அளித்தார்.. அதில், இரு நாட்களுக்கு முன்  (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு லக்கி ஹோட்டலுக்கு நானும் எனது கணவர் தீரஜ் ஜாங்கிட்டும் சென்றோம்.

அப்போது அங்கு ஒருவர் (சோனு சர்மா) வந்து என் கணவரிடம் ரூபாய் 500ஐ கொடுத்தார். அதன் பின் பணத்தை ஏற்றுக்கொண்டு என்னை அந்த நபரிடம் போக சொன்னார்.. பின்னர் அவர் என்னை ஒரு மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்று  தெரிவித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து குற்றவாளியான சோனு சர்மா மற்றும் கணவன் தீரஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் காப்பகத்தில் தங்க வைக்கபட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |