Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… உயரே பறக்க தொடங்கிய விமானம்… அரைமணி நேரத்திற்குள் நேர்ந்த சோகம்..!!

கனடாவில் விமான விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று மான்ட்ரியல் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விமானம் உயர பறக்க தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த செஸ்னா 172 என்ற விமானத்தில் இருவர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் மற்றொருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories

Tech |