வேலூர் மாவட்டம் திருவலம் அண்ணாநகரில், செந்தூர்பாண்டியன் விஜயா தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருந்தான். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சிறுவனின் தாத்தா சின்னசாமி தன்னுடைய வீட்டில் மது அருந்திவிட்டு மீதியை குழந்தைக்கு எட்டும் உயரத்தில் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவன் ரூகேஷ் பழச்சாறு என்று நினைத்து மதுவை அருந்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் நிலையை பார்த்து சின்னச்சாமியை வீட்டில் இருந்த உறவினர்கள் திட்டியுள்ளனர்.
தன்னால் தான் பேரனுக்கு இந்த நிலை என்று எண்ணிய சின்னசாமி திடீரென மயங்கி விழுந்தார். எனவே இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சின்னச்சாமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து சிறுவன் ரூபீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.