தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 2,91,021பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது மாபெரும் மெகா தடுப்பூசி முகாமில் 16, 43,879 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி 10,00,000 பேர் செலுத்தி கொண்டனர். அதன் பிறகு மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் 24, 93,000 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நான்காவது மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசுகையில், “நான்காவது கட்டமாக நடைபெற்ற தடுப்பு முகாமில் 15.74 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் மழையின் காரணமாக 16 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி அனுப்பினால் நன்றாக இருக்கும். மேலும் தமிழகத்தில் 70% பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது நோய்த் தொற்று பரவுவதை குறைக்கலாம். கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று கூறினார்.