விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றுவதில் ஏற்ப்பட்ட மோதல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திருப்பூர் பக்கத்திலிருந்து உள்ள கணியூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ஒரு நோட்டீஸ் கொடுத்து இருந்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கொடியை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் தீர்ப்பு இருந்தால் அது தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைபடுத்த வேண்டும் அல்லது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்ற வரும் நேரத்தில் மட்டும் தீர்ப்பை காட்டுவது அல்லது அதை நடைமுறைப்படுத்த முனைவது ஒரு சார்பு நிலையாக தெரிகிறது. அதைதான் நாங்கள் கண்டிக்கின்றோம். பொதுவாக இதேபோன்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று சொன்னால் அந்த தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது எல்லோருக்குமான பொறுப்பாகும். அது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கொடியேற்றுகின்ற இடத்தில் மட்டும் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்திருக்கிறது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்திருக்கிறது என்று கொண்டுவந்து காட்டுகிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பு ஏற்கனவே அங்கு கொடிகள் பறந்து கொண்டு இருக்கிறது. இதேபோன்று ஒரு சார்பு நடவடிக்கைகள் இருக்கிறது. இதைப்போன்று விஷயங்களை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நாங்கள் கொண்டு வந்து சொல்லி இருக்கின்றோம். அவரும் கனிவுடன் கேட்டுக் கொண்டார் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார் என திருமாவளவன் கூறினார்.