தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் 9 மாவட்டங்களுக்கு சாதாரணமான தேர்தலும் 28 மாவட்டங்களுக்கு தற்செயலான தேர்தலும் நடைபெறும். மேலும் தேர்தல் அன்று மக்கள் வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட்கார்டு, ஓட்டுனர் உரிமம்,
பான்கார்டு, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில அரசு, மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, போன்ற ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.