பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி 2,800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது..
இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..
இந்த சூழலில் தற்போது இரண்டாவது சுற்று முடிவுகளின்படி மம்தா பானர்ஜி 4,250 வாக்குகள் பெற்றுள்ளார். முதல் இரண்டு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை விட 2,800 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் மம்தா பானர்ஜி. எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 1450 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்..
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வென்று எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும்.. அப்பொழுதுதான் முதலமைச்சர் பதவியை தக்கவைக்க முடியும்..