ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ பணியாளர்களை லிப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டை பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அனைவரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மற்றொரு உணவகம் உணவு வினியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. உணவு வினியோகிக்கும் பணியாளர்களும் நம்மில் ஒருவரான மனிதர்கள்தான். அவர்களுக்கு தக்க மரியாதை அளிப்பது அனைவரின் கடமையாகும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நாம் விரும்பும் உணவை நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டுவந்து தரும் சிறப்பான பணியை செய்து வரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.