ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதனால், திருமலை கோவிலில் ஏழுமலையான் சாமி தரிசனத்திற்காக தற்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்ற நிலையில் இலவச தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்குவதை பற்றி பிரம்மோற்சவ விழாவிற்கு பின்னர் ஆலோசிக்கப்படும் என்றும், பாதிப்புகள் அப்போது குறைந்திருந்தால் நேரடி தரிசன டோக்கன் வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.