தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்கள். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்திலும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகின்றனர். இதனிடையே இவ்விருவரின் செயல் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.
அதாவது இத்தனை வருடமாக தமிழ் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய் “தளபதி 66” படத்தை தெலுங்கு தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். அதேபோன்று அஜித் அடுத்தடுத்து படங்களை போனிகபூருடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரையும் தமிழ் தயாரிப்பாளர்களே தூக்கி விட்டனர். இந்நிலையில் இவர்களின் இந்த செயல் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.