Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா ஒருபுறம்…. சமந்தா மற்றொருபுறம்…. சிக்கித்தவிக்கும் விக்னேஷ் சிவன்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் கதாநாயகியாக நடிக்க உள்ளனர். படத்தின் சூட்டிங் தேதியை விக்னேஷ் சிவன் சமந்தா மற்றும் நயன்தாராவிடம் கேட்டுவிட்டு முடிவு செய்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களாக இணைந்து நடித்த சமந்தாவும் நயன்தாராவும் தற்போது அவர்களது வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நயன்தாராவும், தெலுங்கில் உருவாகும் படங்களில் சமந்தாவும் பிஸியாக இருக்கின்றனர். அட்லியும் ஷாருக்கானும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை விட பெரிய பிரபலங்கள் என்பதால் அவர்களது படத்திற்கு நயன்தாரா முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஒருபுறம் காதலி சோதிக்க மறுபுறம் சமந்தா சோதிக்க இருவருக்கிடையே விக்னேஷ் சிவன் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

Categories

Tech |