Categories
சினிமா தமிழ் சினிமா

விசாவுக்காக தான் திருமணம் செய்தேன்…. பிரபல நடிகை பகீர் பேட்டி….!!

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகிய ராதிகா ஆப்தே வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் எனும் இசை கலைஞரை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன்.

எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்தீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் மிக எளிதாக விசா கிடைத்துவிடும் எனவே விசா வாங்குவதற்காக தான் நான் திருமணம் செய்தேன். அதோடு எப்போது என் கணவரை பார்க்க வேண்டிய நேரம் வருகிறதோ அப்போது மட்டும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |