Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்கு கீழ்…. திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய கட்டுப்பாடுகள்…. அதிர்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!

திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பக்தர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வரும் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. 11ஆம் தேதி கருடசேவை நடக்கிறது.பிரம்மோற்சவ விழா அன்று ஆந்திர அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்று திருமலைக் கோயிலில் அலிபிரி மலைப்பாதை, கன்னடம் மற்றும் இந்தி தொலைக்காட்சி சேனல் தொடக்க விழா,

பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி, கோ மந்திரம், 22 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்கிறார். மேலும் கொரோனா தொற்று முழுவதும் கட்டுக்குள் வந்த பின்னரே கவுண்டர்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Categories

Tech |