Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமமாக வழங்க வேண்டும்…. விவசாயிகள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

விளைநிலங்களை சமப்படுத்தும் பணிக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

புதுச்சேரி,நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராமங்கள் வழியாக இந்த சாலை செல்கின்றது. அதன்பின் இந்த சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்த நிலையில் அனைவருக்கும் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் விளைநிலங்களில் சாலை அமைப்பதற்காக சமபடுத்துதல் மற்றும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல் போன்ற ஆயத்த பணிகள் நடந்து வருகின்றது.

இதனையடுத்து விளைநிலங்களை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது விவசாயிகள் அதை தடுத்து நிறுத்தி இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதன் காரணத்தினால் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டு வருவதாக பணி செய்ய வந்தவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அதற்கு பிறகு நில எடுப்பு சிறப்பு தாசில்தார் சித்ரா உள்பட இரண்டு அதிகாரிகள் கையகப்படுத்தி இருக்கும் விளை நிலங்களை சமபடுத்துவதற்காக வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் அங்கே ஒன்று திரண்டு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்காமல் எந்த பணியும் செய்யக்கூடாது என கூறி இழப்பீடு தொகை வழங்கியதில் பாகுபாடு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்குமாறும் இல்லையென்றால் இங்கே எந்த பணியும் செய்யக்கூடாது என அவர்களிடம் வாக்குவாதம் செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் இது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளனர். அதற்கு விவசாயிகள் அதுவரை இங்கே எந்தவித வேலையும் செய்யக்கூடாது என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கூறிய காரணத்தினால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |