மனமுடைந்த சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரம் நடுத்தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், மதன்குமார் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் மதன்குமார் சென்னையில் படித்து வந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தேனிக்கு வந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது மலர்விழி கூலித்தொழில் செய்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதை பார்த்த மதன்குமார் மிகவும் மனமுடைந்து வருத்தத்தில் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து விரக்தியடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையறிந்த தாய் மலர்விழி பதறியடித்து வீட்டிற்கு சென்று மகனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.