மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகில் உள்ள பாப்பம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள பாப்பாப்பட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது நான் மகிழ்ச்சியாக உள்ளது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்க முடியாத நினைவாக இந்த கிராம கூட்ட சபை அமைந்துள்ளது.
இதையடுத்து கடைக்கோடி மக்களின் குறைகளை தீர்க்கவே கிராமசபை கூட்டத்தில் கலந்து உள்ளேன் என்றார். மேலும் பாப்பா பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டித்தரப்படும். அதுமட்டுமில்லாமல் பாப்பம்பட்டி கிராம நக்கல் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். அதன்படி திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 நிறை வேற்றப்பட்டது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி மக்களின் தேவை அனைத்தையும் நிறைவேற்றுவோம். அதன்பிறகு வடநாடு தென்னாடு வேற்றுமை பாராமல் தமிழக வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையை என்பதை உருவாக்க பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.