ஆஸ்திரியாவில் ஏரியில் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆஸ்திரியாவின் கரிந்தியா மாநிலத்தில் ஒசியாச் என்னும் ஏரி உள்ளது. இந்த எரிக்கரை ஓரம் ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான முதியவர் நீந்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எரிக்குள் இருந்த மர்மமான பொருள் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதனை எடுத்து சோதித்த போது திடீரென அந்த பொருள் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த முதியவர் தண்ணீருக்குள் இருந்து வெடி பொருள்களை எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த பகுதியை சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏரிக்குள் கண்டெடுக்கப்பட்ட பொருள் என்னவென்று இதுவரை போலீசாருக்கு தெறியவில்லை. எனவே இந்த விபத்து குறித்து போலீசார் வெடிபொருள் நிபுணர்களுடன் ஆலோசித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வெடிபொருள் நிபுணர்கள் கூறியதாவது, இரண்டாம் உலக போரில் நாஜி கொலை படை மற்றும் பிரிட்டிஷ் இராணுவம் பயன்படுத்திய பல்வேறு வெடிமருந்துகளை ஒசியாச் ஏரியில் கொட்ட பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் பல குண்டுகள் இந்த ஏரியில் விழுந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரிய இராணுவம், இரண்டு உலகப் போர்களில் எஞ்சிய 26 மெட்ரிக் டன் போர் ஆயுதங்களை கண்டு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.