தல 61 குறித்த ஸ்வாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது . இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து அஜித் தற்போது நடித்துள்ள வலிமை திரைப்படமும் போனி கபூர் தயாரிப்பில் தான் உருவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தல 61 படத்தையும் தானே இயக்க உள்ளதாக போனிகபூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தல61 குறித்த ஸ்வாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அது என்னவென்றால் தல 61 திரைப்படம் கொள்ளை அடிப்பது போன்ற கதையம்சம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் அஜீத் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.