தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 1-8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எப்போது பள்ளி திறக்கப்படும் என்றும்? அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்றும்? கேள்விகள் எழுந்துள்ளது. அக்டோபர் மாதமே பள்ளிகள் திறப்பதற்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க ஒரு மாத காலம் உள்ள நிலையில் மாணவர்களை தேடி சென்று பாடம் கற்பிக்கும் முறையும் அமுலுக்கு வர இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்ட அனைத்து சி.இ.ஓ அலுவலகங்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகளின் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் மாநில தலைவர் ஆறுமுகம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படிக்கும் நிலையில் அவர்களுக்கு பெரிதாக தொற்று ஏதும் ஏற்படவில்லை. மேலும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் 18 வயதிற்கு மேற்பட்ட 70 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனால் ஐ.சி.எம்.ஆர் போன்ற அமைப்புகள் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரம் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் 1 இல் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 19 மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் உள்ள வாகனங்கள் மீண்டும் தயார் செய்வதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏற்கனவே மீள முடியாத அளவிற்கு கடனில் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி மழைக்காலம் போன்ற காரணங்களை காட்டி நவம்பர் 1ஆம் தேதியும் தள்ளி வைக்கப்பட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து சிஇஓ அலுவலகங்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் ஒரு சாரார் அரசுப் பள்ளிகளை திறப்பது பற்றி மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் . இந்த நிலையில் தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.