மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென உயிரிழந்து விட்டார்.
சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி கைதி பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.