மகாத்மா காந்தியை 153 வது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னர் மற்றும் முதல்வர் மெரினாவில் மரியாதை செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலை மற்றும் படத்திற்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் பக்தி பாடல் பஜனையை பார்த்து ரசித்தனர்.
இதனிடையே கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் வருகையால் மெரினா கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆர்.காந்தி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டு புறப்பட்டு சென்றனர்.