தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அணில் மின்தடை மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின்னர் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அந்த பணியானது நடைபெற்று வருகிறது.
அதனால் ஒரு சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் ஒன்றோடு ஒன்று இணைப்பு ஏற்பட்டு மின் வினியோகத்தில் தடை ஏற்படுகிறது என்று கூறியிருந்தார். அப்போது அணிலை வைத்து மீம்கள் எழுந்தன. சம்மந்தமில்லாமல் பதில் கூறுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் பொழுது அவருக்கு ஆதரவாக பல தரப்பிலிருந்து பேசினர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியுள்ளதை நிரூபிக்கும் வகையில் நேற்று காங்கேயம் அருகில் சிவன் மலைப்பகுதியில் மின்கம்பியில் அணில் ஒன்று ஓடியதால் திடீரென்று மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிவன்மலை அருகில் உள்ள வேலன் மஹால் பகுதியில் செல்லும் மெயின் மின் பாதையில் உள்ள மின் கம்பம் அருகே அணில் ஒன்று பீங்கானுடன் இறந்து கிடந்தது. அதற்கு மின்வாரிய ஊழியர்கள் அணில் ஓடியதால் பீங்கான் வெடித்து சிதறி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின் கம்பங்கள் மரங்களுக்கு அருகில் இருப்பதனால் அணில்கள் மின்கம்பிகளில் ஓடி விளையாடுகின்றன. அணிலின் வாய்ப்பகுதி பபீங்கானிலும், வால்பகுதி கம்பத்தின் கம்பியில் உரசியதால் பீங்கான் வெடித்து மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் தாக்கி அணிலும் இருக்கிறது என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ராயர்வலசு, கோவில்பாளையம், சின்னாய்ப்பள்ளக்காடு, ஜம்புவாய் போன்ற பகுதியில் நேற்று மதியம் 45 நிமிடம் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின்வாரிய பணியாளர்களை இவற்றை சரி செய்தபின் மின்சாரம் அளிக்கப்பட்டது. மின்வாரிய கூற்றின்படி தற்போது அணில்கள் இனப்பெருக்க காலம் என்பதால் இனி அடிக்கடி ஓடிப்பிடித்து விளையாடும் அவற்றால் மின்தடை வரும் என்று தோணுகிறது இவ்வாறு கூறியுள்ளார்.