சாண்டி மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள செம போத மியூசிக் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் சாண்டி மாஸ்டர் குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது சாண்டி செம போத என்கிற ஆல்பம் பாடலுக்கு நடன இயக்கம் செய்து அவரே நடித்துள்ளார். ஓப்ரா இசையமைத்துள்ள இந்த பாடலை கார்த்திக் இயக்கியுள்ளார். இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் அசத்தலான நடனத்துடன் வெளியாகியுள்ள செம போத பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.