தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு 39.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020-2021 நிதி ஆண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.