Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார் ….? கொல்கத்தா VS பஞ்சாப் இன்று மோதல் ….!!!

2021 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் , இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

அதேபோல் 11 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

Categories

Tech |