Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?… வெளியான புதிய தகவல்…!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். அடுத்ததாக இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vignesh Shivan's Kaathuvaakula Rendu Kaadhal shoot begins without  Nayanthara and Samantha - Movies News

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |