தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று அங்குள்ள மலைக்கோயிலில் உள்ள அன்னதானக் கூடம், தங்கத்தேர், வெள்ளித்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். பிறகு சாமி படங்களை தவிர வேறு எந்த படங்களும் இருக்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் மற்றம் வெள்ளித்தேர் விரைவில் புதுப்பிக்கப்பட்டு அதில் திருமுருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார் என்று கூறினார். அதுமட்டுமில்லாம் ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக குளியல் அறை வசதி, வெந்நீர் வசதி மற்றும் காலை உணவாக இட்லி மற்றும் பொங்கல் வழங்கப்படும் போன்ற வசதிகளை விரைவில் செய்து தருவதாக கூறினார். அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறை மற்றும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் இணைந்து பக்தர்களுக்கு மொட்டை அடிக்க புதிய இயந்திர திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி மொட்டை இயந்திரத்தில் யார் மொட்டை அடிக்க வேண்டுமோ அவரது முகம் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் 89399971540 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.பின்னர் ஸ்கேன் செய்த நபரின் புகைப்படத்துடன் டோக்கன் அனுப்பிவைக்கப்படும். இந்த டோக்கன் காட்டி பக்தர்கள் இலவசமாக மொட்டை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.