தமிழகத்தில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.