தீபாவளியையொட்டி ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அந்நிறுவன மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தங்கள் பயனர்களை குளிர்விக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் 75 ரூபாயிலிருந்து 185 வரையிலான 4 வகையான புதிய மாதாந்திரத் திட்டங்களை உருவாக்கியதுடன், மற்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களை அழைக்க 500 நிமிடம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடக்க விலை ரூ.75 சலுகையாக…
- 3 ஜி.பி. டேட்டா,
- ஜியோ டூ ஜியோ அளவில்லா அழைப்பு (Jio to Jio Unlimited) – மொபைல்ஃபோன், லேண்ட்லைன்
- ஜியோ டூ மற்ற நெட்வொர்க் சேவைகளுக்கு 500 நிமிட இலவச அழைப்பு (28 நாள்களுக்கு)
இதனுடன் ரூ.125, ரூ.155, ரூ.185 விலையில் பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்ச விலை சலுகையாக…
- 56 ஜி.பி. டேட்டா,
- ஜியோ டூ மற்ற நெட்வொர்க் சேவைகளுக்கு 500 நிமிட இலவச அழைப்பு (28 நாள்களுக்கு)
ஜியோவின் இந்த அதிரடி ஆஃபரை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தி தீபாவளியை கொண்டாடுங்கள்.