தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ காற்று காரணமாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கிழக்கு திசையிலிருந்து ஈரப்பதம் கூடிய காற்று வீசக் கூடும்.இதனால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இதையடுத்து தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் மழையுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் குமரி கடல்,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது அதனால் மீனவர்கள் 4 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.