Categories
தேசிய செய்திகள்

பின்னால் இருந்து தாக்கிய சிறுத்தை புலி… வாக்கிங் ஸ்டிக்கால் ஓட விரட்டிய மூதாட்டி… திக்திக் காட்சி… வைரல் வீடியோ…!!!

மும்பை ஆரேகாலனியில் தன்னை தாக்க வந்த சிறுத்தைப்புலியை மூதாட்டி ஒருவர் தடியால் அடித்து விரட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மும்பை மாநிலம், ஆரேகாலனி, விசாகா என்ற பகுதியில் வசித்துவரும் மூதாட்டி நிர்மலா ராம்சிங். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வராண்டா பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென மூதாட்டியை தாக்க முற்பட்டது. இதனால் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அவர் தனது கையில் வைத்திருந்த கைத்தடியை எடுத்துக் தைரியமாக சிறுத்தைப்புலியை விரட்டினார். மேலும் உதவி கேட்டு சத்தம் போட்டார்.

சிறுத்தைப்புலி மிரண்டுபோய் விலகி சென்றது. இந்நிலையில் அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை காப்பாற்றினார். அதற்குள் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. திடீரென்று சிறுத்தைப்புலி தாக்கியதால் மூதாட்டியின் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டி தனது வாக்கிங் ஸ்டிக்கை வைத்து தைரியமாக புலியை விரட்டும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Categories

Tech |