Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! நிதானம் வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! அனைவரிடமும் நிதானமாகப் பேச வேண்டும்.

இன்று எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்வீர்கள். காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். கற்பனைத் திறனும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவிகள் செய்து கொடுப்பார்கள். இல்ல தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொன் பொருள் சேர்க்கை தோன்றும். கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை கொடுக்கும். திறமைகள் வெளிப்படும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அனைவரிடமும் நிதானமாகப் பேச வேண்டும். திடீர் செலவுகள் தோன்றும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பயணங்களில் நல்ல மாற்றங்கள் இருக்கும். புதிய அனுபவத்தை கற்றுக்கொள்வீர்கள். புதுப்புது கலையை தெரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிரச்சனைகள் சரியாகும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். காதல் கைகூடும். காதலில் பிரச்சனை இருக்காது. பிரச்சனையாக இருந்த காதல் சுமுகமான உறவைத் தேடும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். விளையாட்டுத் துறையிலும் அக்கறை இருக்கும். இரண்டு துறையிலும் உங்களால் ஜொலிக்க முடியும். சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |