Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கால தாமதம் இருக்கும்….! முயற்சி வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செய்வது நல்லது.

இன்று எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேற கடுமையாக போராட வேண்டியிருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி செய்வீர்கள். வியாபாரப் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். நண்பரிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நண்பர்களிடம் நல்ல விஷயத்தை மட்டும் பேச வேண்டும். அவர்களை சந்தேக நோக்கில் பார்க்க வேண்டாம். அடுத்தவரிடம் பேசும்போது கவனம் வேண்டும். ஒப்பந்தங்களை படித்து பார்த்து கையெழுத்துப் போட வேண்டும். சந்திராஷ்டம தினம் முழுமையாக இருப்பதினால் பார்த்து பக்குவமாக எதையும் செய்ய வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரும். புது வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். முயற்சிகள் ஓரளவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். எதிர்பார்த்த பலன் இருக்கும். காலதாமதம் ஏற்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். எதையும் யோசித்து செய்வது நல்லது. குழப்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்க வேண்டாம்.

தடை தாமதம் இருக்கும். அதனை சமாளித்து முன்னேறி செல்ல வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். எதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். ஆடம்பரப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். காதலில் உள்ளவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். காதல் கொஞ்சம் கஷ்டத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். ஆனால் கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 8                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |