முதியவரிடம் செயின் பறித்து சென்ற 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலகரியான் வட்டம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் கணேசனின் மளிகைக்கடைக்கு வந்த இரண்டு நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர்.
அப்போது கணேசன் குளிர்பான பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுக்கும் நேரத்தில் திடீரென அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து கணேசன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் இருக்கும் சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.