Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்ச்சத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தென்காசி, நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையனர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |