கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா பெங்களூரில் உள்ள கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து நடிகை சௌஜன்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். அப்போது நடிகை சௌஜன்யா எழுதிவைத்த மரண குறிப்பு ஒன்று கண்டறியப்பட்டது.
அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவரது தற்கொலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து தனக்கு மன நல அழுத்தம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று அவர் தனது மரணம் குறிப்பில் கூறியுள்ளார்.