திருவல்லிக்கேணி தொகுதியில் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சியானது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதியின் தாயார் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் சாதனங்களை வழங்கியபின்னர் கிருத்திகா உதயநிதி பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்பொழுது பத்திரிகையாளர்களில் ஒருவர் கிருத்திகா உதயநிதியிடம், “திருநங்கைகளுக்கும் 50% அரசியல் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, “அரசியலில் நான் அளவுக்கு அதிகமாக பேச மாட்டேன்” என்று பதில் அளித்தார். இதனையடுத்து இந்த உரையாடலை நெட்டிசன்கள், கிருத்திகா உதயநிதி, அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்கள். மேலும் கிருத்திகா உதயநிதி பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு உரிய பதிலை அளித்து இருந்தால் இவ்வாறு நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்க மாட்டார். ஏனெனில் அரசியல் வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் இவ்வாறுதான் பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அறக்கட்டளையின் சார்பில் தொழில் பயிற்சி நடத்தி அதில் பயின்ற திருநங்கைகளுக்கு திருமதி துர்கா ஸ்டாலின் திருமதி கிருத்திகா உதயநிதி @astrokiru அவர்கள் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்குவதற்கான உபகரணங்கள் வழங்கினர் .@Anbil_Mahesh @babu2577 @anbilRaja pic.twitter.com/U9pblZoHGU
— USWA (@uswa_official) September 30, 2021