2021 சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44- வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 தோல்வி ,8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது .நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறுகிறது.