Categories
உலக செய்திகள்

“பணம் தரவில்லையென்றால் வேலை நடக்காது!”.. பிரிட்டனை மிரட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, பிரிட்டன் தங்களுக்கு பணம் தரவில்லையென்றால் தங்கள் நாட்டிலிருந்து, ஆங்கிலக்கால்வாய் வழியே அங்கு நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியே தங்கள் நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன் படி, பிரான்ஸ் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், சில நாட்கள் கழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தனியாக சந்தித்து அவர் பேசியபோது, தற்போதுவரை, பிரான்ஸிற்கு நாம் பணம் கொடுக்கவில்லை. பிரான்ஸ் ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டால் தான் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, தற்போதுவரை பிரான்ஸால் தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

உறுதியளித்தபடி, பிரிட்டன் பணம் தராததால், கலாயிஸ் துறைமுகத்தில் புலம்பெயந்த மக்களை தடுக்கும் பணிக்கு பொறுப்பேற்ற பிரான்ஸ் தளபதி General Frantz Tavart-க்கு  கோபம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர், பிரிட்டன், நிதியுதவியை தரமாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது நன்றாக தெரிகிறது.

அவர்கள், பணம் கொடுக்கவில்லை என்றால், பாதுகாப்பிற்காக கலாயிஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எங்களது இராணுவ வீரர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவோம். எங்களைப் பொருத்தமட்டில், நன்றியில்லாமல் பிரிட்டன் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |