Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாட்டி…. மருத்துவமனை முன் நடனமாடும் இளம்பெண்…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பாட்டிக்காக இளம் பெண் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கனடாவில் “லோர்னா ஸ்டாண்டிங் ரெடி”என்ற பூர்வ குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பெண்மணியின் பேத்தியான மேடோவ் முசுயூ என்ற 17 வயதுடைய இளம்பெண் தன் பாட்டி குணம் அடைவதற்காக மருத்துவமனை முன்பு நடனமாடுகிறார். அவருடன் அவருடைய தோழியான கியாநா பிரன்சிசுவும் நடனமாடுகிறார்.

மேலும் இவர்கள் இருவரும் பாரம்பரிய நடனம் ஆடினாலும் அதில் மாஸ்க் மற்றும் சனிடைசரை பயன்படுத்தி உள்ளனர். அதோடு மற்றவர்களையும் பயன்படுத்தும்படியும் அறிவுறுத்துகின்றனர். மேலும் இவர்கள் நடனம் ஆடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |