பிரித்தானியாவில் 25 வயது இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியதையடுத்து பிரித்தானியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிரித்தானியா மிகவும் ஆபத்தான சூழ்நிலையை தற்போது எதிர்கொள்வதாக ஆப்கானிஸ்தானில் இருந்த பிரிட்டிஷ் துருப்புகளின் முன்னாள் தளபதி கர்னல் ரிச்சர்ட் கெம்ப் கூறியிருந்தார். அதாவது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள High Wycombe என்ற பகுதியில் வசித்து வரும் 25 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் Heathrow விமான நிலையத்தில் வைத்து இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இஸ்லாமிய தீவிரவாதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளைஞர் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு குற்றங்கள் செய்ய தயாராக இருந்ததன் அடிப்படையில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.