Categories
சினிமா தமிழ் சினிமா

நிஜத்திலும் இவர் தப்பானவரா….? போலீஸிடம் சிக்கிய சிங்கம் பட நடிகர்….!!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2013ஆம் வருடம் வெளியான திரைப்படம் சிங்கம் 2. இந்த திரைப்படத்தில் வில்லனாக டேனி கதாபாத்திரத்தில் செக்வுமே மால்வின் என்பவர் நடித்திருப்பார். 20-க்கும் அதிகமான கன்னடம், பாலிவுட் படங்களில் நடித்த இவரை சமீபத்தில் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தொழில் அதிபர்களுக்கும் மாணவர்களுக்கும் போதைப் பொருள் விநியோகம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சூர்யாவின் சிங்கம் 2 திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்துபவராக நடித்த இவர் நிஜத்திலும் போதைப்பொருள் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இவரை கைது செய்த பெங்களூர் போலீசார் மால்வினிடமிருந்து 7 லட்சம் மதிப்பிலான போன்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

Categories

Tech |