இரண்டு வயதான சிறுவன் ஒருவன் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பிடித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தினுஜே நாயக் என்ற சுபம். இரண்டு வயது குழந்தையானா இவர் சமீபத்தில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்த சிறுவன் செய்த சாதனை என்னவென்றால் இவர் உலக நாடுகளின் பெயர்கள், யூனியன் பிரதேசங்களின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள், கண்டங்களின் பெயர்கள், உலக தலைவர்கள் மற்றும் அரசு கவுன்சிலில் உள்ளவர்களின் பெயர்களை மனப்பாடமாக சொல்லி அசத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உலகில் பயன்படுத்தப்படும் கரன்சிகள் மற்றும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் மனப்பாடமாக சொல்கிறார் இந்த இரண்டு வயது சிறுவன். இந்த சாதனைகாகவே அவரது பெயர் சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுவனின் நினைவாற்றலை அறிந்து அவனுடைய பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சி அளித்து இந்த திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது . சிறுவனுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.