ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பலரை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். இதற்காக ரயில்வே கிராசிங் வந்தடைந்த அப்பெண் ரயில் வருவது தெரிந்ததும், கோட்டை கடந்து சென்ற தண்டவாளத்தின் குறுக்கே நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தண்டவாளத்தில் நின்ற அப்பெண்ணை தரதரவென இழுத்து வந்துள்ளார்.
https://twitter.com/ReporterRavish/status/1442733758596018184
இதனால் அப்பெண் காப்பாற்றப்பட்டார். ரயில்வே கேட்டை பற்றியபடி கதறி அழுத அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தன் உயிரையும் பொருட்படுத்தாது அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனரின் மனிதாபிமானமிக்க இச்செயலை வீடியோவாக எடுத்து ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ அனைவராலும் வைரலாகப் பட்டு வருகின்றது.