Categories
உலக செய்திகள்

இவர் மேல தான் சந்தேகமா இருக்கு..! கனடாவில் மாயமான தம்பதி… காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்..!!

சில நாட்களுக்கு முன்பு ரொறொன்ரோ நகரில் மாயமான தம்பதியினர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள Markham எனும் நகரில் வசித்து வந்த தம்பதிகளான Quoc Tran (37), Kristy Nguyen (25) ஆகிய இருவரும் ரொறொன்ரோ நகரில் திடீரென மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் இருவரும் Highway 7 East and Warden Avenue பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் இறுதியாக தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் Vaughan-ல் உள்ள Zenway Boulevard வணிக வளாகத்தில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக காவல்துறையினர் நேற்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் Phuong Tan Nguyen (35) எனும் நபர் அந்த தம்பதியினரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல வழக்குகளில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் Phuong Tan Nguyen தற்போது Mike என்ற புதிய பெயரில் ஏமாற்றி திரிவதாகவும், தம்பதியினர் இருவரும் மாயமான அன்று அந்த நபர் கண்டெயினர் டிரக் ஒன்றை அதே இடத்தில் ஓட்டி சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதற்கிடையே Phuong Tan Nguyen 150 பவுண்ட் எடை கொண்டவர், 5 அடி 9 அங்குலம் உயரம் உடையவர் என்ற அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டு புகைப்படமும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலத்தை தேடி மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |