Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ பட ரிலீஸில் மாற்றம்… தீபாவளியை குறிவைக்கும் படக்குழு?…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் ரிலீஸ் பிளானை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Watch: Teaser of Vishal and Arya starrer 'Enemy' is power-packed | The News  Minute

இந்நிலையில் எனிமி படத்தின் ரிலீஸ் பிளானை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |