Categories
தேசிய செய்திகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்… அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முர்தாநகரில் நகரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான அம்ரிஷ் தியாகி என்பவர் மலை ஏறுவதில் மிகவும் சிறந்து விளங்குபவர். இவர் இமாலயம், சியாச்சின் போன்ற உயரமான மலை உச்சிகளில் பலமுறை ஏறி மூவர்ண கொடியை ஏற்றி உள்ளார். 2005ஆம் ஆண்டு இதே போன்று சியாச்சின் மலை உச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது அணியுடன் சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பனிக்குள் புதைந்தனர்.

மீட்புக்குழுவினர் அந்த ஆண்டு 3 ராணுவ வீரர்களின் உடல்களை மீட்டனர், இருப்பினும் அம்ரிஷ் தியாகியின் உடல் கிடைக்கவில்லை. சமீபத்தில் சடோப்நாத் மலை மலை உச்சயில் ராணுவ வீரர்கள் சென்ற பொழுது அவரது உடல்கள்கூறுகள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று அவரது சொந்த கிராமத்துக்கு உடற்கூறுகள் கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

Categories

Tech |