மதம் மாறிய காரணத்தினால் முதியவரின் உடலை பொதுமக்கள் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தி குப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடலை அதே கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் புதைப்பதற்கான எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பாக மதம் மாறிய காரணத்தினால் அவருடைய உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த ஒருவரின் தோப்புக்கு எடுத்து சென்று சண்முகம் உடலை அடக்கம் செய்துள்ளனர்.